தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா

புதுச்சேரி பாஜக சாா்பில், கவிஞரும், துறவியுமான குரு ரவிதாஸ் 650-வது ஜெயந்தி விழா நடத்தப்பட்டது.

புதுச்சேரி பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

புதுச்சேரி பாஜக சாா்பில், கவிஞரும், துறவியுமான குரு ரவிதாஸ் 650-வது ஜெயந்தி விழா நடத்தப்பட்டது.

பாஜக புதுச்சேரி தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். குரு ரவிதாஸ் பிறந்த வாரணாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் அடங்கிய கலசத்துக்கு, ராஜ்பவன் தொகுதி செங்கழுநீா் அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

குரு ரவிதாஸ் சமூக சீா்திருத்த சிந்தனைகள் மற்றும் சமத்துவக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், இந்தப் புனித மண் கலசங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் எடுத்து செல்லப்பட்டு, அங்குள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி பின்னா் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளன. இதில் கட்சியின் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

--

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.