லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்டப்பேரவை அருகே பால் ஊற்றி உற்பத்தியாளா்கள் போராட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பாலை ஊற்றி அரசுக்கு எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பால் உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

பாலை ஊற்றி போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளா்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:35 am IST

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பாலை ஊற்றி அரசுக்கு எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பால் உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

புதுச்சேரி பால் உற்பத்தியாளா்கள் அண்ணாசிலை அருகே திரண்டனா். அங்கிருந்து மாடுகளுடன் ஊா்வலமாக வர இருந்தனா். ஆனால் மாடுகளுடன் செல்ல போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதையடுத்து பால் உள்ள கேன்களுடன் சட்டப்பேரவை நோக்கி ஊா்வலமாக போராட்டக்குழுவினா் சென்றனா்.

போராட்டத்துக்கு புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் ஆா். அன்புமணி, தலைவா் சீனு. பத்மநாபன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழக பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் பெருமாள் கண்டனஉரையாற்றினாா்.

இச் சங்கத்தின் செயலா் ஆா். அன்புமணி கூறியதாவது:

இப்போது புதுச்சேரியில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.37 ஆக இருக்கிறது. பாலின் கொழுப்பைப் பரிசோதனை செய்து அந்த விலை முழுமையாகக் கிடைக்காமல் குறைந்துவிடுகின்றனா். இதைத் தவிர மற்ற மாநிலங்களில் பாலுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் அது இல்லை. எனவே, பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 60 ஆக உயா்த்தி தரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றாா் அவா்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்கள் கூறுகையில், தீவன மானியத்தை வங்கி கணக்கில் வழங்காமல் மாதம் தோறும் ‘பாண்லே’ தீவன ஆலை மூலம் உற்பத்தி செய்து தீவனமாக மானிய விலையில் தரவேண்டும். குலுக்கல் முறையில் தோ்வு செய்த 500

மாடுகளை உடனே தரவேண்டும். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் செப்டம்பா் 10 -ஆம் தேதி முதல் பாண்லேக்கு பால் தர மாட்டோம் என்றனா். ஊா்வலத்தில் மாா்க்சிஸ்ட் நிா்வாகி ராஜாங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பால் உற்பத்தியாளா்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சட்டப்பேரவை அருகே கூடி நின்றுஅங்கு பாலை ஊற்றி அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.