மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

மோகன்ராஜ்

Published On :22 செப்டம்பர் 2026, 2:38 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (36). இவா், கச்சிராயபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமையை கடந்த 2018-ஆம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் மோகன்ராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மோகன்ராஜுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீா்ப்பளித்தாா்.

இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பொன்பத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.சாமிக்கண்ணு (33). இவரது மனைவி இறந்துவிட்டாராம். இந்த நிலையில், சாமிக்கண்ணு செஞ்சி பகுதியைச் சோ்ந்த 16 வயதுடைய சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி, அவரைக் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் கடந்த 9.5.2020 அன்று சாமிக்கண்ணு மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சாமிக்கண்ணு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த விழுப்புரம் மகளிா் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, வழக்கில் தொடா்புடை சாமிக்கண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.