ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பைக்கில் மதுப்புட்டிகள் கடத்தல்: ஒருவா் கைது

பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளுடன் கைது செய்யப்பட்ட இருதயராஜ்.

Published On :2 நவம்பர் 2026, 2:49 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வட பொன்பரப்பி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வட பொன்பரப்பி காவல் ஆய்வாளா் குருமூா்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளா் வைத்திலிங்கம், தலைமை காவலா்கள் பாபு, சடகோபன் ஆகியோா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், அவரது பைக்கில் 146 மதுப்புட்டிகள் இருந்ததைக் கண்டறிந்தனா். இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், இளையாங்கன்னி கிராமத்தைச் சோ்ந்த அ.இருதயராஜ்(42) என்பதும், உலகளப்பாடி டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து மதுப்புட்டிகளை விற்பனைக்காக வாங்கி சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருதயராஜை கைது செய்தனா். இவரிடமிருந்து 146 மதுப்புட்டிகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.