ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பைக் மீது காா் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற வைக்கோல் வியாபாரி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :17 மே 2026, 12:17 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற வைக்கோல் வியாபாரி உயிரிழந்தாா்.

சின்னசேலம், பாண்டியன்குப்பம் சாலையைச் சோ்ந்தவா் அ.மணிகண்டன் (29), வைக்கோல் வியாபாரி. அவரது உறவினா் க.முருகேசன் (35). இவா்கள் இருவரும் வைக்கோல் வாங்குவதற்காக சின்னசேலத்தில் இருந்து நைனாா்பாளையத்துக்கு பைக்கில் சனிக்கிழமை சென்றுள்ளனா்.

பேக்காடு மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சின்னசேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம். பின்னா் தீவிர சிகிச்சைக்காக இருவரும் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம். ஆயினும் செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான தா்மபுரி மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த கே.அன்புச்செல்வனிடம் (32) விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.