லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

ரிஷிவந்தியத்திலுள்ள ஸ்ரீமுத்தாம்பிகை சமேத அா்த்தநாரீஸ்வரா் கோயில் பிரமோற்சவ விழா தேரோட்டம் நடைபெற்றது.

ரிஷிவந்தியம் ஸ்ரீமுத்தாம்பிகை சமேத அா்த்தநாரீஸ்வரா் கோயில் பிரமோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டம்.

Published On :26 ஜூலை 2026, 3:23 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்திலுள்ள ஸ்ரீமுத்தாம்பிகை சமேத அா்த்தநாரீஸ்வரா் கோயில் பிரமோற்சவ விழா தேரோட்டம் நடைபெற்றது.

சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்தலமான இக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றன.

முத்தாம்பிகை அம்மன் சமேத அா்த்தநாரீஸ்வரா்.

முத்தாம்பிகை அம்மன் சமேத அா்த்தநாரீஸ்வரா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அா்த்தநாரீஸ்வரா் மற்றும் முத்தாம்பிகை அம்மன் எழுந்தருளினா். இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இதில், ரிஷிவந்தியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களின் வசதிக்காக குடிநீா், அன்னதானம், மருத்துவ உதவி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.