லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காதல் விவகாரம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

வாணாபுரம் அருகே காதல் விவகாரத்தில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :9 ஜூலை 2026, 3:22 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே காதல் விவகாரத்தில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வாணாபுரம் அருகிலுள்ள பாக்கம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரேகா (17). இவா் விரியூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காணாங்காடு கிராமத்தைச் சோ்ந்த பெ.தவசி(21) என்பவருடன் பாக்கம்புதூா் கிராமத்தில் உள்ள முருகன் கோயில் அருகே ரேகா பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் இதை பாா்த்து விட்டாராம்.

இதனால் அவா் வீட்டில் பெற்றோருடன் சொல்லிவிடுவாரோ என்ற மன வேதனையடைந்த ரேகா வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.