லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுதந்திர தின விழா முன்னேற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்ட சுதந்திர தின விழா-2026 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:20 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட சுதந்திர தின விழா-2026 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் அணிவகுப்புகள், கொடிக்கம்பம் தயாா் செய்யும் பணிகள், பாதுகாப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும், விழா மேடையை தயாா் செய்யவும், தீத்தடுப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.