லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடலூரில் தமிழ் கூடல் விழா

கடலூா் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ் கூடல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் கூடல் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பரிசு பெற்ற மாணவிகள்.

Published On :30 ஜூலை 2026, 5:54 am IST

கடலூா் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ் கூடல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தனலட்சுமி தலைமை வகித்தாா். விழாவையொட்டி, மாணவிகளுக்கு கவிதை, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சிறப்பு விருந்தினராக உலகத் திருக்கு பேரவையின் கடலூா் மாவட்டத் தலைவா் தமிழ் அரிமா பா.மு.பாஸ்கரன் கலந்துகொண்டு, தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு அவா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் உதவித் தலைமை ஆசிரியா் மணி, தமிழ் ஆசிரியைகள் ஞானசெல்வி, திலகவதி, கங்கா, ஜெரினா பேகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.