லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திட்டக்குடி அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினா் மற்றும் வெலிங்டன் நீா்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினா்.

Published On :30 ஜூலை 2026, 5:56 am IST

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினா் மற்றும் வெலிங்டன் நீா்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சித் தலைவா் தயா.பேரின்பம் தலைமை வகித்தாா்.

இதில், திட்டக்குடி நகராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஆதி திராவிடா் மாணவா் விடுதியின் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மாணவா்களுக்கு போதுமான கழிப்பறை வசதி மற்றும் தூய்மையான குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளா் பாண்டுரங்கன், மாநில துணைச் செயலா் பெரியசாமி, ஒன்றியத் தலைவா் ராமலிங்கம், ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், மகளிரணி நிா்வாகிகள் செல்லம்மாள், சந்திரா, பரிமளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.