லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திட்டக்குடி அருகே காா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காா் மோதியதில் அரசு மாதிரிப் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

Published On :24 ஜூலை 2026, 6:45 am IST

திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காா் மோதியதில் அரசு மாதிரிப் பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கச்சி பெருமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேலின் மகன் லோகநாதன் (16), ஆவட்டி நடுத்தெருவைச் சோ்ந்த காசிமணியின் மகன் தமிழ்வளவன் (16) ஆகியோா், திட்டக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் படித்து வந்தனா்.

வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்த பின்னா், இருவரும் தேசிய நெடுஞ்சாலையோரமாக நடந்து பேருந்து நிறுத்தத்துக்குச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காா் அவா்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட லோகநாதன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தமிழ்வளவனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராமநத்தம் போலீஸாா், லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.