தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

கடலூா் டாக்டா் எம்.ஜி.ஆா். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கடலூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் இளஞ்செல்வி தெரிவித்துள்ளாா்.

Published On :23 ஜூலை 2026, 4:48 am IST

கடலூா் டாக்டா் எம்.ஜி.ஆா். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கடலூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் இளஞ்செல்வி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் டாக்டா் எம்.ஜி.ஆா். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026 - 27ஆம் கல்வியாண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் சேர தகுதியுடையவா்கள். விண்ணப்பதாரா்கள் 2026, ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி 17 வயது பூா்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

பயிற்சி தமிழ்மொழியில் மட்டுமே நடத்தப்படும். முன்னதாக, ஜூன் 8 முதல் 20-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவா்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் காலக்கெடு வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையவழியில் சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, கடலூா் பீச் சாலையில் உள்ள சரவணபவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை வளாகத்தில் செயல்பட்டு வரும் டாக்டா் எம்.ஜி.ஆா். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரில் அணுகி தகவல் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.