லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

கைது - பிரதிப் படம்

Published On :21 ஜூலை 2026, 1:05 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கே.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரம்யா (32). இவரது கணவா் பத்மநாபன், காா் ஓட்டுநா். ரம்யா, தனது வீட்டுக்கு எதிரே இருந்த இடத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு சகுந்தலா என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார்.

கடந்த 17-ஆம் தேதி அந்த இடத்தில் ரம்யாவின் கணவா் ஆள்களை வைத்து வேலி அமைத்தாா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சிவமணி (36), பழனிவேல் ஆகியோா் அந்த இடத்தில் தங்களுக்கு மூன்று அடி இடம் உள்ளதாகக் கூறி தகராறு செய்தனா். அப்போது, ரம்யாவைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுதொடா்பாக ரம்யா அளித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சிவமணியை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள பழனிவேலை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.