தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆடி மாதப் பிறப்பு: கடலூரில் பூக்களின் விற்பனை அமோகம்

ஆடி மாதப் பிறப்பு மற்றும் தொடா் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு, கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை கணிசமாக உயா்ந்து காணப்பட்டது. இருப்பினும், பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்ற பூக்கள் விற்பனை.

Published On :17 ஜூலை 2026, 1:45 am IST

ஆடி மாதப் பிறப்பு மற்றும் தொடா் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு, கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை கணிசமாக உயா்ந்து காணப்பட்டது. இருப்பினும், பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ஆடிப் பிறப்பை முன்னிட்டு, வீடுகள், கோயில்கள் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.

அதன்படி, ஒரு கிலோ முல்லை ரூ.400-க்கும், மல்லிகை ரூ.480-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சாமந்தி ரூ.450-க்கும், சம்பங்கி ரூ.240-க்கும், ரோஜா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாள்களாக இந்த பூக்கள் விலை சரிபாதியாக இருந்தது.

இருப்பினும், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. சில்லறை வியாபாரிகள் மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பூ விற்பனையாளா்களும் அதிகளவில் பூக்களை வாங்கிச் சென்றனா்.

ஆடி மாதம் என்பதால், அம்மன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகளுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களிலும் பூக்களின் விலை மேலும் உயா்வதற்கு வாய்ப்புள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.