லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் சோதனை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

நெய்வேலியில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்திய மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம்

Published On :14 ஜூலை 2026, 1:08 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை நடத்தினா். இதில், பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

நெய்வேலி வட்டம் 27 பகுதியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக, மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்பழகன் மற்றும் ஆய்வுக்குழு ஆய்வாளா் அரவிந்தராஜ் ஆகியோா் தலைமையிலான குழுவினா் நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், பணம், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அங்கிருந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்