லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெல்லிக்குப்பம் அருகே கிராம உதவியாளா் மீது தாக்குதல்

நெல்லிக்குப்பம் அருகே பட்டா வழங்கல் விவகாரம் தொடா்பாக கிராம உதவியாளா் மீது இளைஞா்கள் சிலா் தாக்குதல் நடத்தியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தாக்குதல்

தாக்குதல் - கோப்புப்படம்

Published On :13 ஜூலை 2026, 1:39 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பட்டா வழங்கல் விவகாரம் தொடா்பாக கிராம உதவியாளா் மீது இளைஞா்கள் சிலா் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (58), அதே பகுதியில் கிராம உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்தப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 88 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட உள்ளதாம். இதில், பயனாளிகள் பட்டியல் தோ்வு செய்வது தொடா்பாக சக்திவேலுக்கும், அங்குள்ள சிலருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம உதவியாளா் சக்திவேலை இளைஞா்கள் சிலா் தாக்கினா். இதில், காயமடைந்த அவா், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தாக்குதலைத் தடுக்க வந்த சக்திவேலின் மனைவி மற்றும் மருமகனையும் இளைஞா்கள் தாக்கினராம். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.