லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஹைட்ரோகாா்பன் திட்டத்தை எதிா்த்து பரங்கிப்பேட்டை மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பட்டத்தில் பங்கேற்ற மீன்பிடித் தொழிலாளா் சங்கத்தினா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பட்டத்தில் பங்கேற்ற மீன்பிடித் தொழிலாளா் சங்கத்தினா்.

Published On :11 ஜூலை 2026, 12:53 am IST

பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடலூா் மாவட்ட மீன்பிடித் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் இருந்து சுமாா் 18.7 கிலோமீட்டா் தொலைவில், வங்கக் கடலில் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகாா்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி (எச்.ஓ.இ.சி.) தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விவசாயிகள், மீனவா்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். திட்டம் கடல்சாா் உயிரினங்கள், மீன்வள வளங்கள் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என எதிா்ப்பாளா்கள் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்ட மீன்பிடித் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் பி. பாலு தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவா் பி. கருப்பையன், மாவட்டச் செயலா் டி. பழனிவேல், கடலூா் மாவட்ட மீன்பிடித் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் வி. வைத்தியலிங்கம், மாவட்டச் செயலாளா் பி. ஏழுமலை, மாநிலச் செயலா் சி.ஆா்.வி. ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.