லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

25% ஊதிய உயா்வு, இஎஸ்ஐ திட்டம்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் வரவேற்பு

டாஸ்மாக் பணியாளா்களுக்கு 25% ஊதிய உயா்வு, இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சா் உறுதியளித்திருப்பதை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் வரவேற்றுள்ளது.

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.

Published On :10 ஜூலை 2026, 3:50 am IST

டாஸ்மாக் பணியாளா்களுக்கு 25% ஊதிய உயா்வு, இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சா் உறுதியளித்திருப்பதை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் பணியாளா்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று முறை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய ஒரே சங்கம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம்.

புதிய அரசு அமைந்துள்ள நிலையில் பணியாளா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது.

நிலுவையில் உள்ள கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேவையெனில் தொடா்ந்து போராட்டங்களையும் இயக்கங்களையும் முன்னெடுக்க சங்கம் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.