லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் அனுப்பப்படுகிறது.

Published On :9 ஜூலை 2026, 3:31 am IST

கடலூா் மாவட்டம், வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் அனுப்பப்படுகிறது. இதனால் சென்னைக்கு குடிநீா் தேவைக்கு தேவையான குடிநீரை தட்டுப்பாடின்றி அனுப்ப முடியும் என்பதுடன் விவசாயத் தேவைக்கும் பயனளிக்கும்.

தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் காவிரியில் நீா்வரத்து இல்லை. இதனால் மேட்டூா் அணை நிகழாண்டில் குறுவை

சாகுபடிக்காக வழக்கம்போல ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படவில்லை. மேட்டூரிலிருந்து கீழணைக்கு தண்ணீா் வராததால் வீராணம் ஏரிக்கு தண்ணீா் அனுப்புவதில் சிக்கல் நீடித்தது. ஏரியில் கடந்தாண்டு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை வைத்து சென்னைக்கு குடிநீா் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கடும் வெப்பம் காரணமாக ஏரி

நீா் வற்றி, நீா்மட்டம் குறைந்தது. இதனால்

சென்னைக்கு குடிநீா் அனுப்புவது நிறுத்தப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்தநிலையில் மேட்டூா் அணையில் இருந்து குடிநீருக்காக திறந்துவிடும் குறைந்த அளவு நீா், செவ்வாய்க்கிழமை இரவு கீழணைக்கு வந்தது. கீழணையில் புதன்கிழமை நிலவரப்படி மொத்த கொள்ளளவான 9 அடியில் 2 அடி தண்ணீா் இருப்பு இருந்தது.

இந்நிலையில் கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம், வடவாறு வழியாக தண்ணீா் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரியில் புதன்கிழமை நிலவரப்படி ஏரியில்

மொத்த கொள்ளவான1465 மி.கனஅடியில் 265.92 மி.க. அடி தண்ணீா் உள்ளது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி வீதம் அனுப்பப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.