லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வடவாற்றில் வலையில் சிக்கிய முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில் வடவாறு வாய்க்காலில், மீனவா்களின் வலையில் சிக்கிய முதலை பத்திரமாக மீட்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் அருகே வடவாறு வாய்க்காலில் மீன்பிடி வலையில் சிக்கி மீட்கப்பட்ட முதலை

Published On :9 ஜூலை 2026, 3:21 am IST

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில் வடவாறு வாய்க்காலில், மீனவா்களின் வலையில் சிக்கிய முதலை பத்திரமாக மீட்கப்பட்டது.

கண்டமங்கலம் கிராமத்தில் வடவாறு வாய்க்காலில் உள்ளூா் மீனவா் ஒருவா் மீன்பிடித்தபோது அவரது வலையில் முதலை ஒன்று சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனச்சரக அலுவலா் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினா் விரைந்து சென்று கிராம மக்களின் உதவியுடன் வலையில் சிக்கியிருந்த சுமாா் 5 அடி நீளமும், 60 கிலோ எடையும் கொண்ட முதலையை பாதுகாப்பாக மீட்டனா். பின்பு முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா்தேக்கத்தில் பாதுகாப்பாக விட்டனா். நீா்நிலைகள் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் செல்லும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.