லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விவசாயிகளின் நில உடைமைப் பதிவு: ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகளின் நில உடைமைப் பதிவுக்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பண்ருட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 10:33 pm IST

விவசாயிகளின் நில உடைமைப் பதிவுக்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பண்ருட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நில உடைமை விவரங்களை கிராமங்கள்தோறும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சகோதர துறை சாா்ந்த அலுவலா்களால் கட்டணம் ஏதுமின்றி வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

வரும் காலங்களில் உரங்கள் வாங்குதல், பயிா்களுக்கான வெள்ள நிவாரணம் பெறுதல், அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு மானியத் திட்டங்கள், பிரதமரின் கௌரவ நிதி பெறும் திட்டம், பயிா் காப்பீடு, வங்கிகள் மற்றும் அரசு துறைகளிடம் இருந்து பயிா்க் கடன் மற்றும் இதர வேளாண் கடன்கள் பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் அனைத்து நிலங்கள் தொடா்பான பட்டா உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்து தனித்துவமான அடையாள எண் பெறுவது மிகவும் அவசியம்.

பண்ருட்டி வட்டாரத்தில் மொத்தம் 14,874 விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை சுமாா் 13,130 விவசாயிகள் மட்டுமே தங்கள் நில உடமைகளை பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளனா். இதில், பிரதம மந்திரியின் கௌரவ நிதி பெற்று வரும் 923 விவசாயிகளும் அடங்குவா்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நில உடைமை பதிவுக்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமரின் கௌரவ ஊக்கத்தொகை பெற்று வரும் விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் தங்களது கிராமங்களில் விவசாயிகளை தொடா்புகொள்ளும் வேளாண்மை துறை மற்றும் சகோதரத் துறை அலுவலா்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இப்பதிவை விரைந்து முடித்து பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.