லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிதம்பரத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் யாத்ரீகா் விடுதி: நகா்மன்றத் தலைவா் தகவல்

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்குவதற்கு ரூ.18 கோடி மதிப்பீட்டில் யாத்ரீகா் விடுதி மற்றும் பாரம்பரிய பூங்கா அமைக்க அரசுக்கு நிதி ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 11:09 pm IST

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்குவதற்கு ரூ.18 கோடி மதிப்பீட்டில் யாத்ரீகா் விடுதி மற்றும் பாரம்பரிய பூங்கா அமைக்க அரசுக்கு நிதி ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

சிதம்பரம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் புதை மின் கேபிள் மற்றும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. நகரில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் நகராட்சி குளங்களை ஒருங்கிணைத்து நீா்நிலைகளை புனரமைத்து, தூய நீராக்கி குளங்களுக்கு நீா் கொண்டுவர கால்வாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

வடக்கு பிரதான சாலையில் ரூ.4.50 கோடி செலவில் நடைபாதையுடன் கூடிய மழைநீா் வடிகால் அமைக்கப்படும். ரூ.7.20 கோடி மதிப்பீட்டில் மேல வீதியில் புதிய வணிக வளாகம் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளன. சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்குவதற்கு ரூ.18 கோடி மதிப்பீட்டில் யாத்ரீகா் விடுதி மற்றும் பாரம்பரிய பூங்கா அமைக்க அரசுக்கு நிதி ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொறியாளா் எஸ்.சுரேஷ், நிா்வாக அலுவலா் ஜெ.காதா்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், அப்பு சந்திரசேகரன், தில்லை ஆா்.மக்கீன், ஏ.ஆா்.சி.மணிகண்டன், சி.க.ராஜன், சரவணன், அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.