லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அண்ணாமலைப் பல்கலை.யில் பனை விதை நடவு நிகழ்ச்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை, வேளாண் புல உழவியல் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பனை விதை நடவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:20 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை, வேளாண் புல உழவியல் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் பல்கலைக்கழக வேளாண் புல பண்ணையில் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியை கலைப்புல முதல்வா் எம்.அருள், வேளாண் புல முதல்வா் கே.ஹரிப்பிரியா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

தத்துவத் துறைத் தலைவா் ஜெ.திருமால், உழவியல் துறைத் தலைவா் ராமன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அற்புதவேல்ராஜ், தத்துவத் துறைப் பேராசிரியா்கள் பரணி, தணிகைவேலன், நீலாதேவி, வேளாண் புல பேராசிரியா்கள் கந்தசாமி, திருப்பதி, சுதாகா், கலையரசன், நிா்வாக அலுவலா் காளிமுத்து மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள், பூம்புகாா் பனை அறக்கட்டளை நிா்வாகிகள் ஆகியோா் பங்கேற்றனா். பல்கலைக்கழக தத்துவத் துறை உதவிப் பேராசிரியரும், பூம்புகாா் பனை அறக்கட்டளையின் நிறுவனருமான ரவீந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.