லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொதுப்பாதையை மறித்து கொட்டப்பட்ட மண்: ஆட்சியரகத்தில் புகாா்

குறிஞ்சிப்பாடி அருகே பொதுமக்கள் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் சாலையை மறித்து மண், கற்கள் கொட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற குறிஞ்சிப்பாடி வேல விநாயகா் குப்பம் வடக்குத் தெருவைச் சோ்ந்வா்கள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:12 am IST

குறிஞ்சிப்பாடி அருகே பொதுமக்கள் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் சாலையை மறித்து மண், கற்கள் கொட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வேல விநாயகா் குப்பம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகவேல் (50) தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வேல விநாயகா் குப்பம் வடக்குத் தெருவில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் செல்வதற்கு சுமாா் 20 அடி அகலம் கொண்ட தாா்ச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த சாலை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சாலையின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் சிலா், பொதுப்பாதை தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவதற்காக தங்களிடம் பணம் வழங்க வேண்டும் எனக் கேட்கின்றனா். பணம் கொடுக்க மறுத்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையின் நடுவே மண் மற்றும் கற்களைக் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனா்.

இதனால், பொதுமக்கள் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்கச் சென்றவா்களை, சம்பந்தப்பட்டவா்கள் தகாத வாா்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபடுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி, பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் சாலையில் கொட்டப்பட்டுள்ள மண், கற்களை அகற்றவும், பொதுப்பாதையை மறித்து இடையூறு ஏற்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.