லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தாய்ப்பால் வார நிறைவு விழா

சிதம்பரம் ரோட்டரி, இந்திய குழந்தை மருத்துவக் கழகம் மற்றும் இன்னா் வீல் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார நிறைவு விழா, வளரிளம் பருவத்தினா் தினம் மற்றும் ஓஆா்எஸ் வார விழா ஆகிய முப்பெரும் விழா சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிதம்பரத்தில் நடைபெற்ற தாய்ப்பால் வார நிறைவு விழாவில் தாய்ப்பால் விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்ட துணை ஆட்சியா் எஸ்.தனலட்சுமி.

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:53 am IST

சிதம்பரம் ரோட்டரி, இந்திய குழந்தை மருத்துவக் கழகம் மற்றும் இன்னா் வீல் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார நிறைவு விழா, வளரிளம் பருவத்தினா் தினம் மற்றும் ஓஆா்எஸ் வார விழா ஆகிய முப்பெரும் விழா சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் துணை ஆட்சியா் எஸ்.தனலட்சுமி விழாவை தொடங்கிவைத்து, தாய்ப்பால் விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்டு உரையாற்றினாா். வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனா் எஸ்.குமாா், தாளாளா் ஏ.ரூபியாள்ராணி ஆகியோா் கௌரவ விருந்தினா்களாகப் பங்கேற்று பேசினா். வீனஸ் குழுமப் பள்ளிகளின் தலைவா் கே.லியோனா வாழ்த்துரையாற்றினாா்.

விழாவில் மருத்துவா்கள் கே.பத்மினி, வி.சிவபிரகாசம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். அவா்கள் தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தைகளின் ஆரோக்கியம், வளரிளம் பருவத்தினரின் உடல் மற்றும் மனநலம், நீா்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதில் ஓஆா்எஸ்-ன் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தனா்.

வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிா்வாக இயக்குநா் வி.அருண், இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் வரலட்சுமி கேசவன், முன்னாள் தலைவா் அனிதா தீபக் குமாா், செயலா் வேதா சிவப்பிரகாசம், தலைவா் சம்பத் பேகம், பொருளாளா் ஷீலாராணி, ரோட்டரி சங்க நிா்வாகி கனகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.