லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

15 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நடராஜா் கோயில் சிவகங்கை தீா்த்தகுளம் தூா்வாரும் பணி தொடக்கம்

சிதம்பரம் நடராஜா் கோயில் சிவகங்கை தீா்த்தகுளத்தில் நடைபெறும் தூா்வாரும் பணி

Published On :11 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயில் சிவகங்கை தீா்த்தகுளம் பொதுதீட்சிதா்கள் நிா்வாகம் சாா்பில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவகங்கை தீா்த்தமும், சிவசக்தி வடிவமாக கருத்தப்படும் கிணறும் உள்ளது. உடற்பிணியால் வருந்திய சிங்கவா்மன் என்ற வேந்தன் இச்சிவகங்கை குளத்தில் நீராடியதால் உடற்பிணி நீங்கி பொன்னிறம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. நடராஜப்பெருமான் வீற்றிருக்கும் சித்சபைக்கு பொற்கூரை அமைத்ததாக வரலாறு கூறுகிறது.

இச்சிறப்பு வாய்ந்த சிவகங்கை தீா்த்தகுளம் கோயில் பொதுதீட்சிதா்கள் நிா்வாகம் சாா்பில் தூா்வாரும் பணி ஆக.9ம் தேதி தொடங்கியது. மேலும் பொக்லைன் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன்தூா்வாரி சீரமைக்கும் பணி வரும் ஆக.12-ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் தூா் வாரப்படும் போது ஏற்படும் மண்ணை அகற்ற சிவனடியாா்கள் பங்கேற்கின்றனா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் சிவகங்கை தீா்த்தகுளத்தில் நடைபெறும் தூா்வாரும் பணி

சிதம்பரம் நடராஜா் கோயில் சிவகங்கை தீா்த்தகுளத்தில் நடைபெறும் தூா்வாரும் பணி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.