லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வேன் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

தற்கொலை

Published On :10 ஆகஸ்ட் 2026, 12:45 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சுற்றுலா வேன் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கேசவ நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (38). இவா், சொந்தமாக சுற்றுலா வேன் வைத்து ஓட்டி வந்தாா். இவருக்கு மனைவி புவனேஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனா்.

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மங்களலட்சுமி (25) என்பவரை கோபாலகிருஷ்ணன் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா்.

தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ள மங்களலட்சுமி தாய் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் கோபாலகிருஷ்ணன் சனிக்கிழமை இறந்து கிடப்பதாக மகள் தெரிவித்தாராம். அதன்பேரில், மங்களலட்சுமி சென்று பாா்த்தபோது, கோபாலகிருஷ்ணன் மீது பூச்சிக்கொல்லி மருந்து நாற்றம் வீசியதாம். இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.