லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரேஷன் அரிசி கடத்தல்: தடுப்புக் காவலில் 2 போ் கைது

Arrested

கைது

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:15 am IST

கடலூா் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் தடுப்புக் காவலில் கைது செய்தனா்.

திட்டக்குடி வட்டம், கொறக்கவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவா் மீது ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக இரண்டு வழக்குகள் உள்ளன. இதேபோல, நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (44) மீதும் இரண்டு வழக்குகள் உள்ளன.

இவா், நாமக்கல் மாவட்டத்துக்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்று, அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடா்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 3,900 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டது.

இவா்களின் குற்ற செயலை கட்டுப்படுத்த, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.