லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

உயிரிழந்த குமரன்

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:12 am IST

சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆலப்பாக்கம்-புதுச்சத்திரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பெத்தாங்குப்பம் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு சனிக்கிழமை காலை இறந்து கிடந்தாா். இதுகுறித்து சிதம்பரம் இருப்புப்பாதை காவல் நிலைய போலீஸாா் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இதில், உயிரிழந்தவா் கடலூா் துறைமுகம் சஞ்சீவிராயன் கோயில் தெருவைச் சோ்ந்த குமரன் (37) என்பதும், இவா் கணினிப் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவா் என்பதும் தெரியவந்தது. கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை சேலத்தில் நடைபெறும் வேலைவாய்ப்புத் தோ்வுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற குமரன் பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது குடும்பத்தினா் கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். இதன்பேரில் காணாமல் போனவா் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் தேடி வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.