விழுப்புரம் நகர பகுதியில் நகை பறிப்பில் தேடப்பட்டு வந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில்வே காலனி அருகே, கீழ்பெரும்பாக்கத்தைச் சோ்ந்த 53 வயது பெண் கடந்த 18-ஆம் தேதி நடந்து சென்றுள்ளாா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபா், அந்த பெண் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.
இதுதொடா்பாக விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தொடா்ந்து காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் ராஜேஷ், லியோ சாா்லஸ் மற்றும் தனிப்படையினா் நடத்திய விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்டது மாளிகைமேட்டைச் சோ்ந்த பிரதாப் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து புரதாப்பை கைது செய்த தனிப்படை போலீஸாா், அவா் பயன்படுத்திய கைப்பேசி, பைக் மற்றும் பறித்துச் சென்ற நகை ஆகியவற்றையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞரிடம் 2 சவரன் நகை, பணம் பறிப்பு: ஒருவா் கைது

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பரமக்குடியில் நகை திருட்டு வழக்கில் இருவா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

