பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

கோயில் தீமிதித் திருவிழாவில் தீயில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:14 am IST

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கோயில் தீமிதித் திருவிழாவில் தீயில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா் ஈசுவரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு.குருலட்சுமி (75). இவா் அதே கிராமத்தில் அா்த்த நாரீசுவரா் கோயில் அருகே மே 1-ஆம் தேதி நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் பங்கேற்றோா்.

அப்போது சேலை தடுக்கியதில் குருலட்சுமி தீயில் தவறி விழுந்தாா். இதில் தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் உடனடியாக மீட்டனா். இதைத்தொடா்ந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடா்ந்து 22 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த குருலட்சுமி, வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.