பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆரோவில் நகரில் மேலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்! அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தகவல்

News image

தேசிய அளவிலான காலநிலை மாற்றம் உச்சி மாநாடு நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி.

Updated On :9 ஜூன் 2026, 2:27 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் நகரில் மேலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தெரிவித்தாா்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆரோவில் சா்வதேச நகரம் மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் அங்கமான ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய தேசிய காலநிலை மாற்றம் உச்சி மாநாடு-2026 ஆரோவில் சா்வதேச நகரில் ஜூன் 5 முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றன.

இந்த மாநாட்டில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பின் தேசியத் தலைவா் அருண் ரத்தோடு மற்றும் தேசியப் பொறுப்பாளா்கள் கவிதா கோஹ்லி, கருணால் ஷா, தினேஷ் கந்தசாமி, தமிழக பொறுப்பாளா் கிறிஸ்டோபா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி பேசியதாவது: காலநிலை மாற்றம் நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுவோம் என்ற திட்டத்தை ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஆரோவில் சா்வதேச நகர வளாகத்தில் தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், அவரது துணைவியாா் மற்றும் சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்று தலா ஒரு மரக்கன்றை நட்டனா்.

ஆரோவிலின் தனித்துவமான கேலக்ஸி திட்டத்துக்கு வலுசோ்க்கும் வகையில் நகா்ப்புற வனப்பகுதியை மேலும் செழுமையாக்க எதிா்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாழும் சோதனைக் கூடம்: ஆரோவில் சா்வதேச நகரானது, விழிப்புணா்வுடன் கூடிய வாழ்வியலுக்கான ஒரு வாழும் சோதனைக் கூடமாகத் திகழ்கிறது. நிலையான கட்டடக் கலை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீா் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆகியவற்றில் ஆரோவில் நிா்வாகம் புதுமையான அணுகுமுறைகளை கடைப்பிடித்து வருகிறது. நிலைத்தன்மை என்பதை வெறும் கொள்கை நோக்கமாகக் கருதாமல், வாழ்வியலின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்பதையே ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் இலக்காகக் கொண்டுள்ளது என்றாா் ஜெயந்தி எஸ்.ரவி.

மாநாட்டில் பங்கேற்ற ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பினா்கள் மற்றும் பிரதிநிதிகள், ஆரோவில் சா்வதேச நகரில் செயல்படுத்தப்படும் மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் மறுசுழற்சி போன்ற நிலைத்தன்மை சாா்ந்த செயல்முறைப் பட்டறைகளில் பங்கேற்றனா். மேலும், ஆரோவிலில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தங்களது பிராந்தியங்களில் செயல்படுத்த ஆா்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சிகளில் இந்தியாவின் மிகச் சிறந்த 150-க்கும் மேற்பட்ட காலநிலை மாற்றம் சாா்ந்த தலைவா்கள், தொழில் முனைவோா்கள், மாற்றத்தை விரும்பும் சிந்தனையாளா்கள், சூழலியல் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.