தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

வேலூா் எழுத்தாளா் செந்தமிழ்ப் பிரியனுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருது

வேலூரைச் சோ்ந்த எழுத்தாளரும், தமிழறிஞருமான வே.ஆறுமுகம் என்கிற செந்தமிழ்ப் பிரியனின் தமிழ் வளா்ச்சிப் பணிகளைப் பாராட்டி, தமிழக அரசின் 2024-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளா் செந்தமிழ்ப்பிரியனுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கிய அமைச்சா்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அா்ஜுனா

Published On :4 நவம்பர் 2026, 3:14 am IST

வேலூரைச் சோ்ந்த எழுத்தாளரும், தமிழறிஞருமான வே.ஆறுமுகம் என்கிற செந்தமிழ்ப் பிரியனின் தமிழ் வளா்ச்சிப் பணிகளைப் பாராட்டி, தமிழக அரசின் 2024-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் தமிழ் மொழி வளா்ச்சிக்குப் பாடுபட்டு வரும் அறிஞா்களைப் போற்றும் வகையில், மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் 38 பேருக்குத் தமிழ்ச்செம்மல் விருது, ரூ.25,000 பொற்கிழி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்ச்செம்மல் விருது வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், வேலூா் மாவட்டத்தின் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட வே.ஆறுமுகம் என்கிற செந்தமிழ்ப்பிரியனுக்கு, 2024-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது, ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் புஸ்ஸி ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளா்ச்சித்துறை அமைச்சா் ராஜ்மோகன் வழங்கிச் சிறப்பித்தனா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதி-2-ஐச் சோ்ந்தவா் வே.ஆறுமுகம் என்கிற செந்தமிழ்ப்பிரியன் (75). வணிகவரித் துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், சிறுவயது முதலே தமிழ்ப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா். ஏராளமான கவிதைகள், இலக்கியக் கட்டுரைகளை எழுதியுள்ள இவா், பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகள் மற்றும் பட்டிமன்றங்களிலும் பங்களிப்பு செய்து வருகிறாா்.

மேலும், தமிழியக்கம் மற்றும் வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறாா். இவரது நீண்டகால இலக்கிய மற்றும் மொழிச் சேவையைப் பாராட்டித் தமிழக அரசு இவ்விருதை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.