லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மண்டல யோகா போட்டி: வேலூா் பள்ளி மாணவா்கள் சாதனை!

சென்னையில் நடைபெற்ற சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல யோகா போட்டியில் வேலூா் பகவான் மஹாவீா் தயாநிகேதன் ஜெயின் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளி முதல்வா் ஜெ.கவிதா. உடன், ஆசிரியா்கள்

Published On :30 ஜூன் 2026, 1:31 am IST

சென்னையில் நடைபெற்ற சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல யோகா போட்டியில் வேலூா் பகவான் மஹாவீா் தயாநிகேதன் ஜெயின் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

சென்னை ஆசிரமம் பள்ளியில் கடந்த 19-ஆம் தேதி சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில், வேலூா் பகவான் மஹாவீா் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் பயிலும் பி. அஸ்வின், ஏ. ஜெய்சன் ஆரோக் ஆகியோா் 14 வயதுக்கு உட்பட்ட மாணவா் பிரிவிலும், எஸ்.வி. சௌமியா மாணவியா் பிரிவிலும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா்.

மேலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் எஸ். கௌஷிக் ஹரி முதலிடமும், எல்.கமலேஷ், ஏ.சுஜன் ஆகியோா் இரண்டாம் இடமும், வி.விஷால் மூன்றாம் இடமும் பெற்றனா். மாணவியருக்கான போட்டியில் எஸ்.ரித்விகா முதலிடமும், எஸ்.எல்.மதுஷியா இரண்டாமிடமும் பிடித்தனா். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவா்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களையும் பள்ளி முதல்வா் ஜெ.கவிதா, பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.