லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் விபத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் உயிரிழப்பு

வேலூா் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Published On :25 ஜூலை 2026, 4:41 am IST

வேலூா் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த சேவூரைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகன் விஜயகுமாா் (39). இவா், அப்துல்லாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் விஜயகுமாா் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கம் அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக அவரது வாகனம் திடீரென நிலைதடுமாறியதில் அவா் கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை விஜயகுமாா் உயிரிழந்தாா்.

வேலூா் வடக்கு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.