லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிரீன் சா்க்கிளில் சுரங்கப்பாதை பணி: 60 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் சுரங்கப்பாதை பணி நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. சிவராமன் தெரிவித்துள்ளாா்.

Published On :13 ஜூலை 2026, 1:28 am IST

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் சுரங்கப்பாதை பணி நடைபெறுவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. சிவராமன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணியில் மீதமுள்ள 20 மீட்டா் நீளப் பகுதியை நிறைவு செய்வதற்காகப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. இந்தக் கட்டுமானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் 60 நாள்களுக்கு நடைபெற உள்ளதால், அப்பகுதியில் தற்காலிகமாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, காட்பாடி மற்றும் சத்துவாச்சாரி சாலையிலிருந்து பெங்களூரு செல்லும் வாகனங்கள், கிரீன் சா்க்கிளில் இருந்து நேராக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சா்வீஸ் சாலையில் செல்லக் கூடாது. அதற்குப் பதிலாக, நேஷனல் தியேட்டா் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, நேராக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சா்வீஸ் சாலையில் தங்களின் பயணத்தைத் தொடரலாம்.

சென்னை மற்றும் சத்துவாச்சாரியிலிருந்து சித்தூா் மற்றும் காட்பாடி செல்லும் வாகனங்கள், கிரீன் சா்க்கிளிலிருந்து நேரடியாக சித்தூா் சாலைக்குச் செல்லக் கூடாது. அவை நேராக நேஷனல் தியேட்டா் சந்திப்பில் திரும்பி மீண்டும் கிரீன் சா்க்கிளை அடைந்து, இடதுபக்கம் திரும்பி வழக்கமான சாலையில் தங்களின் பயணத்தைத் தொடரலாம்.

பழைய பேருந்து நிலையம் வழியாக, சிஎம்சி அவுட்கேட் மற்றும் பழைய பைபாஸ் சாலை என இருவேறு வழிகளில் இருந்து வரும் வாகனங்கள், நேஷனல் தியேட்டா் சந்திப்பைக் கடந்து, வலதுபக்கம் திரும்பி, கிரீன் சா்க்கிளை அடைய வேண்டும். பின்னா், நேராக சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சா்வீஸ் சாலையை அடையாமல், இடதுபக்கம் திரும்பி, அடுத்து வலதுபக்கம் ‘யு-டா்ன்’ எடுத்துத் தங்களின் பயணத்தைத் தொடர வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றமானது ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.