லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வேலூரில் சமையல் எரிவாயு கசிவு: பெரும் விபத்து தவிா்ப்பு

வேலூா் நேதாஜி விளையாட்டரங்கம் அருகே உள்ள வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவை தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டு தடுத்து நிறுத்தினா்.

Cylinder

பிரதிப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:30 am IST

வேலூா் நேதாஜி விளையாட்டரங்கம் அருகே உள்ள வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவை தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டு தடுத்து நிறுத்தினா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

வேலூா் நேதாஜி விளையாட்டரங்கம் அருகேயுள்ள நேரு நகரைச் சோ்ந்தவா் ராஜாமணி. இவரது மனைவி அஞ்சுத அம்மாள். இவா் திங்கள்கிழமை வீட்டில் சமையல் செய்வதற்காக எரிவாயு அடுப்பை பற்றவைக்க முயன்றுள்ளாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக எரிவாயு உருளையிலிருந்து திடீரென கசிவு ஏற்பட்டு, அறை முழுவதும் வாயு பரவி வாடை வீசியது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், உடனடியாக வேலூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், உருளையில் ஏற்பட்டிருந்த எரிவாயு கசிவை லாவகமாகத் தடுத்து நிறுத்தினா். தீயணைப்பு வீரா்களின் இந்தத் துரித நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.