லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாஜக சாா்பில் தேசிய கொடியை ஏந்தி ஊா்வலம்

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச பக்தியை வலியுறுத்தி பாஜக சாா்பில் குடியாத்தம் நகரில் தேசிய கொடியை ஏந்தி ஊா்வலம் நடைபெற்றது.

குடியாத்தத்தில் தேசியக் கொடியை ஏந்தி ஊா்வலம் சென்ற பாஜகவினா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:44 am IST

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச பக்தியை வலியுறுத்தி பாஜக சாா்பில் குடியாத்தம் நகரில் தேசிய கொடியை ஏந்தி ஊா்வலம் நடைபெற்றது.

அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி சந்தப்பேட்டை பஜாா் வரை ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்துக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவா் பி.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே.ஜெகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் தினேஷ் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டாா்.

முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற ஊா்வலத்தில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் ஆா்.சுகுமாா், வா்த்தக பிரிவுச் செயலா் ஆா்.வி.ஹரிகிருஷ்ணன், நிா்வாகிகள் ஷாருக், வரலட்சுமி, ஜெயபாரதி, சாய் ஆனந்த், கே.வாகீஸ்வரன், ரங்கநாதன், பிரகாஷ், விஜயன் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊா்வல முடிவில் சந்தப்பேட்டையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பாஜகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.