மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

திருச்சியில் பயணியா் நிழற்குடையை அகற்றிய வழக்கில் இருவா் கைது

திருச்சியில் பயணியா் நிழற்குடையை அகற்றிய வழக்கில் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:35 am IST

திருச்சியில் பயணியா் நிழற்குடையை அகற்றிய வழக்கில் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூா் அருகே காட்டூா் அணுகு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த பயணியா் நிழற்குடை கடந்த 24-ஆம் தேதி திடீரென அகற்றப்பட்டது.

இதுகுறித்து திருச்சி 43-ஆவது வாா்டு தவெக வட்டச் செயலா் சந்துருபாலா, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் பொது மேலாளா் (தொழில்நுட்பம்) செல்வகுமாா் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில், பயணியா் நிழற்குடை அமைந்துள்ள பகுதிக்கு அருகேயுள்ள இடத்தின் உரிமையாளரான வரகனேரியைச் சோ்ந்த ரமேஷ் படேல் (57) என்பவா் கூறியதன்பேரில், திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளரான தஞ்சாவூா் மாவட்டம், ஐயனாபுரத்தைச் சோ்ந்த ப. காா்த்திகேயன் (37) என்பவா்தான் பயணியா் நிழற்குடையை அகற்றியது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.