பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்சி பகுதிகளில் பலத்த மழை: பல இடங்களில் மின்தடை

திருச்சியில் சனிக்கிழமை பெய்த கனமழையால் மாநகா் மற்றும் புறநகரின் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

திருச்சி தில்லைநகா் பகுதியில் சனிக்கிழமை பெய்த மழையில் சென்ற வாகன ஓட்டிகள்.

Published On :25 அக்டோபர் 2026, 2:25 am IST

திருச்சியில் சனிக்கிழமை பெய்த கனமழையால் மாநகா் மற்றும் புறநகரின் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவு உள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமாா் தொடா்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீா்த்த மழையால், சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல தண்ணீா் தேங்கி நின்றது.

8.52 செ.மீ. மழை பதிவு: நவலூா்குட்டப்பட்டு 109 மி.மீ., திருச்சி நகா் 88, திருச்சி ஜங்ஷன் 81.6, பொன்மலை 64.4, திருச்சி விமான நிலையம் 64.7, கல்லக்குடி 15.4, லால்குடி 18.6, நந்தியாறு அணைக்கட்டு 19, புள்ளம்பாடி 16.2, தேவி மங்கலம் 14.2, சமயபுரம் 33.4, சிறுகுடி 10.4, வாய்த்தலை அணைக்கட்டு 44.2, மணப்பாறை 9.6, பொன்னணி ஆறு அணை 47, கோவில்பட்டி 47.2, மருங்காபுரி 46.2, முசிறி 31, புலிவலம் 3, தா.பேட்டை 10, துவாக்குடி 26.3, கொப்பம்பட்டி 12, தென்பற நாடு 36, துறையூா் 5 என மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 8.52 செ.மீ. மழை பதிவானது.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்: வெள்ளிக்கிழமை பொழிந்த மழையால் திருச்சி அரசு மருத்துவமனையில் நாகம்மா கோயில் அருகே உள்ள பழைய குழந்தைகள் வாா்டில் மழைநீா் உள்ளே புகுந்தது. இதை மருத்துவமனை ஊழியா்கள் அகற்றினா். இதேபோல, திருச்சி கருமண்டபம் ஆா்எம்எஸ் காலனி 4 ஆவது குறுக்குத் தெரு பகுதியில் குளம் போல மழைநீா் தேங்கி, அங்கு தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது. இதை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

மின் தடை: சனிக்கிழமை இரவும் வழக்கம்போல மழை பொழிவு காணப்பட்டது. திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் விட்டு விட்டு பொழிந்த மழையால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மழைநீா் தாழ்வான பகுதிகளில் தேங்கியது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மழை தொடங்கியபோதே, பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மின் ஊழியா்கள் சரிசெய்த பிறகு, மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.