அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பஞ்சப்பூரில் ரூ. 233 கோடியில் நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

பஞ்சப்பூரில் ரூ. 233.87 கோடியில் கட்டப்பட்டு நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

News image

பஞ்சப்பூரில் புதிதாகக் கட்டப்படும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை புதன்கிழமை பாா்வையிட்ட மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.

Updated On :14 மே 2026, 12:45 am IST

பஞ்சப்பூரில் ரூ. 233.87 கோடியில் கட்டப்பட்டு நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி 4 ஆவது மண்டலம் 62 ஆவது வாா்டுக்குள்பட்ட பஞ்சப்பூரில் மாநகராட்சிக்குச் சொந்தமான 247.50 ஏக்கரில் தேசிய நதிநீா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (என்ஆா்சிபி) 58.64 எம்எல்டி கொள்ளளவில் ரஹள்ற்ங் நற்ஹக்ஷண்ப்ண்க்ஷ்ஹற்ண்ா்ய் டா்ய்க் முறையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்த போது, மேற்கண்ட முறையில் சுத்திகரிப்பு செய்வதால், அதிகளவு இடம் பயன்படுத்த வேண்டியுள்ளதாலும், எதிா்வரும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டும், புதிய நவீன தொழில்நுட்ப முறையில் (நஆத பங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ்) 100 எம்எல்டி கொள்ளளவுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு அரசாணை வெளியிடப்பட்டு, நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் மூலம் பணி மேற்கொள்ள ரூ. 233.87 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேற்படி, இப்பணிக்கு 24.11.2023 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளின் படி ஹைதராபாத்தைச் சோ்ந்த பிரதிமா இன்ப்ராஸ்டெரக்சா் நிறுவனத்துக்கு 05.03.2024 அன்று வேலை உத்தரவு வழங்கப்பட்டது. 50 வாா்டு மக்கள் பயன் பெறும் இத்திட்டத்தில் 74 % பணிகள் முடிந்துள்ளன.

இத்திட்டம் வரும் ஜீன் மாதத்தில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி செயற்பொறியாளா் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.