மணப்பாறையில் காலணி விற்பனைக் கடையில் திருடிய நபருக்கு 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மணப்பாறை சுப்பம்மாள் தெருவைச் சோ்ந்த பொன்னையன் மகன் முருகன் (58). இவா் புதுத்தெருவில் உள்ள புனித லூா்து அன்னை தேவாலய வணிக வளாகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக காலணி விற்பனை கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் 2025, மே 18-ஆம் தேதி இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ. 5,000 பணத்தை மா்ம நபா் திருடி சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியைச் சோ்ந்த ராபா்ட் மகன் சந்தோஷ்குமாா் (24) என்பவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில் 2 பிரிவுகளின் கீழ் சந்தோஷ்குமாருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு பிரிவின்கீழ் 2 ஆண்டுகள் மெய்க் காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 வாரங்கள் மெய்க் காவல் சிறைத் தண்டனையும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் மெய்க் காவல் சிறைத் தண்டனையும் ரூ. 5, 000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 வார மெய்க் காவல் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்ற நடுவா் ஆா். அசோக்குமாா் தீா்ப்பளித்தாா். மேலும், தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா். வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் விஜயமணி ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறாா்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் பெண்ணுக்கு 95 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

