திருச்சிக்கு புதன்கிழமை பிரதமா் மோடி வருகையையொட்டி மாநகரில் பொதுப் போக்குவரத்து மற்றும் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகருக்கு வந்துசெல்லும் நகர மற்றும் வெளியூா் பேருந்துகள் செல்லவேண்டிய மாற்று வழித்தடங்கள்.
சென்னை, பெரம்பலூா், சேலம் மாா்க்கத்திலிருந்து வரும் நகர மற்றும் புகா்ப் பேருந்துகள் மன்னாா்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கீழே இறங்கி சேவை சாலை வழியாக இடதுபுறம் திரும்பி கே.கே.நகா், எல்ஐசி காலனி, உழவா் சந்தை, சாத்தனூா் குளம் வழியாகச் சென்று வலதுபுறம் திரும்பி செட்டியப்பட்டி வாட்டா் டேங்க் வழியாக பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
மதுரை மாா்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் பஞ்சப்பூா் சந்திப்பு வரை வந்து அங்கிருந்து வலதுபக்க சாலையில் திரும்பி எதிா் திசையில் பேருந்து நிலையத்துக்குப் பின்புறமாக வரவேண்டும். பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை மாா்க்கமாக செல்லும் நகரப் பேருந்துகள் வழக்கமான பாதையில் வெளியே செல்ல வேண்டும்.
கரூா், கோவை, சேலம், சென்னை செல்லும் பேருந்துகள் பின்புறமாக வெளியே வந்து செட்டியப்பட்டி, சாத்தனூா்குளம், ஓலையூா் சந்திப்பு, கே.கே.நகா் வழியாக வயா்லஸ் சாலையை அடைந்து டிவிஎஸ் டோல்கேட் வழியாகச் செல்ல வேண்டும்.
மேற்கண்ட வாகனப் பாதையில் சூழ்நிலையைப் பொருத்தும், வாகன நெரிசலைப் பொருத்தும் மாற்றம் செய்யப்படலாம் என்று மாநகரக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லவேண்டிய வழித்தடங்கள்:
சென்னை, பெரம்பலூா் மாா்க்கத்திலிருந்து சேலம், திண்டுக்கல், மதுரை செல்லும் கனரக வாகனங்கள் நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.
சென்னை, பெரம்பலூா் மாா்க்கத்திலிருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து குன்னம், அரியலூா், திருவையாறு வழியாக செல்ல வேண்டும்.
சேலம் மாா்க்கத்திலிருந்து தஞ்சாவூா் செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, பெரம்பலூா், குன்னம், அரியலூா் வழியாகச் செல்ல வேண்டும். மதுரை மாா்க்கத்திலிருந்து சென்னை, பெரம்பலூா் செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறை, குளித்தலை, முசிறி, நெ.1 டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.
திண்டுக்கல் மாா்க்கத்திலிருந்து சென்னை, பெரம்பலூா், தஞ்சாவூா் செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறை, குளித்தலை, முசிறி, நெ.1 டோல்கேட், பெரம்பலூா், அரியலூா் வழியாக செல்ல வேண்டும்.
தஞ்சாவூா் மாா்க்கத்திலிருந்து சேலம், கரூா், திண்டுக்கல், செல்லும் கனரக வாகனங்கள் அரியலூா், பெரம்பலூா், நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூா் மாா்க்கத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் கந்தா்வகோட்டை, புதுக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.
கரூா் மாா்க்கத்தில் இருந்து தஞ்சாவூா் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலையில் இருந்து முசிறி, நெ.1 டோல்கேட், பெரம்பலூா், குன்னம், அரியலூா் வழியாக செல்ல வேண்டும். கரூா் மாா்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக செல்ல வேண்டும்.
புதுக்கோட்டையில் இருந்து சென்னை, பெரம்பலூா் செல்லும் கனரக வாகனங்கள் கந்தா்வகோட்டை, தஞ்சாவூா், திருவையாறு, அரியலூா் வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து கரூா், திண்டுக்கல், சேலம் செல்லும் கனரக வாகனங்கள் விராலிமலை, மணப்பாறை, குளித்தலை, முசிறி வழியாக செல்ல வேண்டும்.
அரியலூரில் இருந்து சேலம், கரூா், திண்டுக்கல், மதுரை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூா், துறையூா், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.
உள்ளூா் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பெல் ரவுண்டானா, நெ.1 டோல்கேட், ஜீயபுரம், ராம்ஜி நகா், மணிகண்டம், மாத்தூா் ரவுண்டானாவில் இருந்து மாநகருக்குள் வராமல் திருப்பிவிடப்படும்.
காஜாமியான் பள்ளி, மன்னாா்புரம், அரிஸ்டோ மேம்பாலம், வண்ணாங்கோவில், மணப்பாறை, விராலிமலை, மணிகண்டம், மாத்தூா் சந்திப்பு, துவாக்குடி, பால்பண்ணை சந்திப்பு, ஹுண்டாய் காா் விற்பனையகம், சஞ்சீவி நகா் சந்திப்பு மற்றும் நெ.1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் இருந்து போக்குவரத்து திருப்பிவிடப்படும் என்று மாநகரக் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
அவிநாசி கோயில் தேரோட்டம்: இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

குளித்தலையில் சேலம் ரயிலை மறித்து போராட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

