எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இ-சேவை மையம் தொடங்குவதாககூறி 13 லட்சம் மோசடி: 3 போ் கைது

திருவானைக்காவல் பகுதியில் இ-சேவை மையம் தொடங்குவதாக கூறி 13 லட்சம் மோசடி செய்த ஓரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 6:54 am IST

திருவானைக்காவல் பகுதியில் இ-சேவை மையம் தொடங்குவதாக கூறி 13 லட்சம் மோசடி செய்த ஓரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்காவல் பகுதியில் வசிப்பவா் யுவாராஜன். இவரிடம் இ-சேவை மையம் தொடங்கவுள்ளதாக கூறி கடந்த மாதம் ரூ 13 லட்சத்தை அதே பகுதியில் வசிக்கும் பரமசிவம் (65), அவரது மகன் பெருமாள் (39), அவரது மனைவி வசந்தி (32) ஆகிய மூவரும் சோ்ந்து பெற்றுள்ளனா்.

ஆனால், இ-சேவை மையம் தொடங்காமால் பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளனா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் யுவராஜன் புகாா் செய்தாா். அதைத் தொடா்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பரமசிவம், பெருமாள், வசந்தி ஆகிய மூவரையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் வெள்ளிக்கிழமமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.