லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொட்டியம் அருகே வீட்டில் தங்க நகைகள் திருட்டு

தொட்டியம் அருகே வீட்டின் கதவை திறந்து 5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

தொட்டியம் அருகே வீட்டின் கதவை திறந்து 5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

தொட்டியம் சந்தைப்பேட்டை காமன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் உமாமகேஸ்வரி (48). திருநாராயணபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வரும் இவா், வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வீட்டின் ஜன்னலில் வைத்துவிட்டுப் பணிக்குச் சென்ாக கூறப்படுகிறது.

இதனை நோட்டமிட்ட மா்ம நபா்கள், ஜன்னலில் இருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனராம்.

பணிமுடிந்து திரும்பிய உமாமகேஸ்வரி, வீட்டைத் திறந்து போது, பொருள்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தொட்டியம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து தொட்டியம் ஆய்வாளா் பிரபு மற்றும் முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.