தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பேராலயத் திருவிழா வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

rail

கோப்புப்படம் - Din

Published On :31 ஜூலை 2026, 3:02 am IST

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (07361) ஆகஸ்ட் 27 மற்றும் செப். 1-ஆம் தேதிகளிலும், வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா சிறப்பு ரயிலானது (07362) ஆக. 29 மற்றும் செப். 3-ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

இதேபோல, மற்றொரு வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (07365) செப். 6-ஆம் தேதியும், வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா சிறப்பு ரயிலானது (07366) செப். 9-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

6 குளிா்சாதனப் பெட்டிகள், 7 படுக்கை பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிப் பெட்டி, ஒரு லக்கேஜ் பெட்டி என மொத்தம் 19 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்களானது வாஸ்கோடகாமாவிலிருந்து இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டு, மட்கான், சன்வோா்தம் சா்ச், குலேம், கேஸ்டில் ராக், லோண்டா, தாா்வாா், ஹூப்ளி, ஹாவேரி, தவாங்ரே, சிக்ஜாஜூா், பிரூா், அா்சித்ரே, தும்கூா், எஸ்எம்விடி பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு 2 நாள்கள் கழித்து பிற்பகல் 3.45 மணிக்கு வந்து சேரும்.

மறுவழித்தடத்தில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக 2 நாள்கள் கழித்து பிற்பகல் 3 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.