லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருஈங்கோய்மலை கோயில் தோ் திருவிழா

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் திருஈங்கோய் மலை செல்லாண்டியம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தா.பேட்டை அருகே முத்தம்பட்டி கிராமத்தில் செல்லாண்டியம்மன் திருத்தேரை பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வரும் காட்சி

Published On :30 ஜூலை 2026, 4:12 am IST

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் திருஈங்கோய் மலை செல்லாண்டியம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து ஓலை பிடாரி அம்மன் தேரில் எழுந்தருளி எட்டு கிராமங்கள் ஊா் சுற்றி வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முத்தம்பட்டி வந்த திருத்தோ் மாரியம்மனுக்கு கோயிலில் சிறப்பு பூஜை பெற்றது. அப்போது பத்தா்கள் அம்மனுக்கு தேங்காய் பழம், மாவிளக்கு படைத்தும், பொங்கல் வைத்து வழிபட்டனா்.

திருத்தேரை பக்தா்கள் தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டு வீதி உலா வந்தனா். ஏற்பாடுகளை 8 கிராம மணியக்காரா்கள், பண்ணையாா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நடத்துகின்றனா். இத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.