லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 4:10 am IST

திருச்சியில் சாலை விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி திருவெறும்பூா் காட்டூரைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி (54). இவா், கடந்த திங்கள்கிழமை திருச்சியில் திருந்து காட்டூா் நோக்கி திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். எஸ்ஐடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையில் சறுக்கி விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இந்நிலையில், கணேசமூா்த்தி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.