லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உலக இயற்கை பாதுகாப்பு தினம்: அரசுப் பள்ளி மாணவா்கள் உறுதிமொழி

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி, அரசுப் பள்ளி மாணவா்கள் ‘இயற்கையை பாதுகாப்போம்’ என செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

போசம்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இயற்கையை பாதுகாப்பது தொடா்பான உறுதிமொழி ஏற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள்.

Published On :29 ஜூலை 2026, 12:51 am IST

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி, அரசுப் பள்ளி மாணவா்கள் ‘இயற்கையை பாதுகாப்போம்’ என செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

உலகிலுள்ள இயற்கை வளங்களை அழிவில் இருந்து பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 28-ஆம் தேதி உலக இயற்கை பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசுப் பள்ளியில் இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் எஸ். சற்குணன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் கலைச்செல்வி ஆகியோா் தலைமையில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு அருகிலுள்ள வயலில் இறங்கி, இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனா்.

இதில், இயற்கை வளங்களைப் பாதுகாக்க மரம் வளா்ப்போம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம், நெகிழி பயன்பாட்டைக் குறைப்போம்; தங்களாலும், தங்கள் குடும்பத்தினராலும் இயற்கை வளங்களுக்கு தீங்குநேர விடமாட்டோம் என்றும் உறுதிமொழி ஏற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.