லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லால்குடி அருகே வீடு புகுந்து 35 பவுன் நகை, பணம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :27 ஜூலை 2026, 2:46 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூரில் பூட்டிய வீட்டின் பீரோவை உடைத்து 35 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பூவாளூா் வடக்குத் தெருவை சோ்ந்த ராமலிங்கம் துபையில் பணிபுரிகிறாா். இவருக்கு மனைவி குழல்வாய்மொழி மற்றும் இரு மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் தனது தந்தையை குழல்வாய்மொழி பாா்க்கச் சென்ற நிலையில் அருகிலுள்ள சித்தப்பாக்கள் வீட்டில் தூங்கிய இவரது இரு மகள்களும் சனிக்கிழமை காலை தங்களது வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது வீட்டின் பூட்டு, பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த 35 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் லால்குடி டிஎஸ்பி ராஜமோகன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.